குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு உயர்தர திரிபோஷாவை தொடர்ந்து வழங்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்கும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
தெற்காசியாவிலேயே சிறுவர்களுக்கு இவ்வாறான ஊட்டச்சத்தை வழங்கும் நாடு இலங்கை மட்டுமே என சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
தொடர்ச்சியாக திரிபோஷ வழங்கும் வேலைத்திட்டம் தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியுள்ளதாகவும், இதற்கு தேவையான அதிகபட்ச நிதியை திறைசேரியில் இருந்து ஒதுக்குவதாகவும் அமைச்சர் ரம்புக்வெல்ல மேலும் கூறுகிறார்.
திரிபோஷ தொடர்பில் அண்மைய நாட்களில் வெளியான செய்திகளை ஆராய்ந்து கலந்துரையாடுவதற்காக சுகாதார அமைச்சுக்கு வந்திருந்த தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட குழுவிடம் நடத்திய கலந்துரையாடலில் இந்த உண்மைகள் வெளியாகியுள்ளன.
திரிபோஷவுக்கான மூலப்பொருட்களை கொள்வனவு செய்வதில் அரசாங்கத்திற்கு மேலதிகமாக தனியார் துறையிலும் சில நிறுவனங்கள் ஆதரவை வழங்க இணங்கியுள்ளதாகவும் இதன் ஊடாக எதிர்காலத்தில் வேலைத்திட்டத்தை பூரணமாக முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
நாட்டில் திரிபோஷ வேலைத்திட்டம் வீழ்ச்சியடையவில்லை எனவும் தற்போதைய சூழ்நிலையில் உணவுப் பணவீக்கம் ஏற்பட்டாலும் அதனைத் தடுப்பதற்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)