மொரட்டுவையில் உள்ள திருமண வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்ற திருமண வைபவத்தின் போது இவ்வாறு மணமகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
NCPA ஆனது அதன் அவசர சேவை தொலைபேசி எண் 1929 மூலம் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸாருடன் இணைந்து தலையிட்டது.
ஆரம்ப விசாரணையில் மணமகளுக்கு 15 வயது என்றும் மணமகனுக்கு 19 வயது என்றும் தெரியவந்துள்ளது.
பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மணமகன் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதோடு, வயதுக்குட்பட்ட மணமகள் மருத்துவ பரிசோதனைக்காக களுபோவில கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (யாழ் நியூஸ்)