களுத்துறையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்திருந்த பேரணியில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தைப் பாதுகாக்க கட்சி உறுப்பினர்கள் ஒன்றிணையுமாறு கேட்டுக் கொண்டார்.
“அந்த நாட்களில் நாங்கள் ரணிலைத் திட்டினோம். இப்போது அவர் எங்களுடன் இருப்பதால் நாங்கள் அவரைப் பாராட்டுகிறோம். அவர் சரியான பாதைக்கு வந்துள்ளார் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று அவர் கூறினார். (யாழ் நியூஸ்)