நாட்டில் நாளை மறுதினம் (10) அனைத்து வங்கிகளும், கொழும்பு பங்குச் சந்தையும் மூடப்பட உள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய தினம் வரும் பொது விடுமுறைக்கு பதிலாகவே திங்கட்கிழமை இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மிலாது நபி கொண்டாட்டங்களுக்காகவும், பூரணை தினத்தை முன்னிட்டும் நாளைய தினம் (9) விசேட பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.