இலங்கை வானொலி பிறை எம்.எம். அறிவிப்பாளரும் ஆசிரியருமான ஜே. வஹாப்தீன் எழுதிய ஐந்து நாடகங்கள் நூல் வெளியீட்டு விழா இன்று (27) வியாழக்கிழமை பிற்பகல் 03.00 மணி அளவில் ஒலிவில் பரண் தோட்டத்தில் இடம் பெறும்.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறை தலைவர் பேராசிரியர் எஸ். எம். ஐயூப் தலைமையில் இடம்பெறும் நூல் வெளியீட்டு விழாவிற்கு தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை, கலாசாரப் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம்.பாசில் பிரதமர் அதிதியாகவும் தென்கிழக்கு பல்கலைக்கழக மொழித் துறை பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாஹ் இலக்கிய ரீதியாகவும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மொழித்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.எப். எம். அஷ்ரப், பிரதிப்பணிப்பாளர் பஷீர் அப்துல் கையூம், அக்கரைப்பற்று அல்/ஹம்றா மகா வித்தியாலயத்தின் அதிபர் அஷ்ஷேக் யு.கே. அப்துர் ரஹீம் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொள்கின்றனர்.
ஷம்ஸ் வெளியீட்டகத்தால் வெளியிடப்படும் இந்நூல் வெளியீட்டு விழாவில், நூல் மீதான உரையை உதவிக் கல்விப் பணிப்பாளர் கலாநிதி ஹனிபா இஸ்மாயில் நிகழ்த்துகிறார்.
யாழ் நியூஸிற்காக எம்.எஸ்.எம்.ஸாகிர்