குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால கொள்கைகளை வகுப்பதில் முன்னுரிமைகளை அடையாளம் காணும் தேசிய சட்டமன்ற உப குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் நேற்று (07) இடம்பெற்றதுடன் பாராளுமன்ற உறுப்பினரின் பெயரை பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் பரிந்துரைத்துள்ளதுடன் அதனை பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் உறுதிப்படுத்தியுள்ளார்.
புதிய ஜனாதிபதி முன்னிலையில், பொது நிர்வாகம், சுகாதாரக் கொள்கைகள், கல்விக் கொள்கைகள், மீன்பிடி மற்றும் உணவுக் கொள்கைகள், மின்சாரம் மற்றும் எரிசக்தி கொள்கைகள், காலநிலை மாற்றக் கொள்கைகள் மற்றும் தொழில்முனைவோர் கொள்கைகள் தொடர்பான யோசனைகள் மற்றும் முன்மொழிவுகளைப் பெறுவதற்காக உப குழுக்களைக் கூட்டுவதற்கு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர். (யாழ் நியூஸ்)