பேராதனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யஹலதென்ன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் பெண் ஒருவர் நேற்று (14) உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் ஒக்டோபர் 14ஆம் திகதி மாலை 6.00 மணிக்கும் மறுநாள் காலை 9.00 மணிக்கும் இடையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் 65 வயதுடைய யஹலதன்ன பகுதியைச் சேர்ந்தவர்.
உயிரிழந்த பெண் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளதுடன், கூர்மையன ஆயுதத்தால் தலையில் தாக்கப்பட்டமையினால் மரணம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கண்டி நீதவான் மரணம் தொடர்பான நீதவான் விசாரணைகளை மேற்கொண்டதுடன், சடலம் பிரேத பரிசோதனைக்காக பேராதனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பேராதனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (யாழ் நியூஸ்)