பெற்றோல் விலை குறைக்கப்பட்டாலும் முச்சக்கர வண்டி கட்டணம் குறைக்கப்படாது என முச்சக்கரவண்டி சங்கங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி தற்போது முச்சக்கர வண்டிகளுக்கு வழங்கப்படும் 5 லீற்றர் போதாது என அகில இலங்கை முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.
எனினும், எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பணி புரிபவருக்கு மேலதிக பணம் செலுத்தி இன்னொருவரின் QR இல் எரிபொருளைப் பெற்றுக் கொள்ள நேரிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான நிலையில் கட்டணத்தை திருத்த முடியாது எனவும், மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமாயின் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் எனவும் அகில இலங்கை முச்சக்கர வண்டிகள் நிபுணத்துவ சங்கம் மேலும் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)