இலங்கை மாணவர்களுக்கு பெலாரஸ்ஸில் உயர்கல்வியை தொடரும் வாய்ப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கை மாணவர்களுக்கு பெலாரஸ்ஸில் உயர்கல்வியை தொடரும் வாய்ப்பு!


இலங்கை மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகளை வழங்கும் நோக்கத்தில் பெலாரஸ் அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட இலங்கை கல்வி அமைச்சு இணங்கியுள்ளது.


பெலாரஸ் நாட்டுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுடன் நடத்திய கலந்துரையாடலின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.


இலங்கையிலிருந்து அதிகளவான இளைஞர்கள் பெலாரஸ் பல்கலைக்கழகங்களில் இணைந்து உயர்கல்வியை தொடர்வதாக பெலாரஸ் கல்வி அமைச்சர் அன்ட்ரே இவானெட்ஸிடம் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.


சமகால கல்வி முறைகளுக்கு ஏற்றவாறு இலங்கையில் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக பாடத்திட்டங்களை மேம்படுத்துவது தொடர்பான விடயங்களை அமைச்சர் பிரேமஜயந்த விளக்கினார்.


பெலாரஸ் நாட்டில் அதிகளவான இலங்கை மருத்துவ மாணவர்கள் கல்வி பயின்று வருவதாகவும் கல்வியமைச்சர் நினைவூட்டியதுடன், இம்மாணவர்களின் எதிர்கால நலன் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.


அத்துடன், இலங்கையின் கல்வி சீர்திருத்தங்களுக்கு தமது அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கும் என இதன்போது பெலாரஸ் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.


இதேவேளை, பெலாரஸ் மற்றும் இலங்கை கல்வி அமைச்சுக்களுக்கு இடையில் கைச்சாத்திடப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பான வரைவு குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.