நாட்டில் நடைமுறைக்கு வரவிருக்கும் புதிய வரி!

நாட்டில் நடைமுறைக்கு வரவிருக்கும் புதிய வரி!


நாடாளுமன்றத்தின் நிதிக் குழுவின் ஒப்புதல் மற்றும் சபாநாயகரின் கையொப்பத்துக்குப் பிறகு புதிதாக வெளியிடப்பட்ட தனிநபர் வருமான வரி நவம்பர் 01 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ருவன்வெல்லவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனை தெரிவித்துள்ளார்.


தனிநபர் வருமானம் தொடர்பில் உள்நாட்டு இறைவரிச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் அண்மையில் வெளியிடப்பட்டது.


அதன்படி, மொத்த மாத வருமானம் 100,000 ரூபா அல்லது அதற்கு மேல் வருமானம் பெறுவோர் வரி செலுத்த வேண்டியிருக்கும்.


அந்த வகையில் உயர்ந்த தனிநபர் வருமான வரி விகிதம் 36வீதமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.


Previous News Next News