சமூக வலைத்தளங்கள் ஊடாக அன்பளிப்புகளை பெற்று தருவதாக கூறி பண மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் நேற்று (11) சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேக நபர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள நபர்களிடம் அன்பளிப்பு பெற்றுத் தருவதாக கூறி ஏமாற்றி அவர்களிடமிருந்து 1 கோடியே 62 லட்சத்து 7 ஆயிரத்து 175 ரூபா பணத்தை பெற்று தனது வங்கிக் கணக்குகளில் பணத்தை வைப்பில் இட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 30 வயதுடைய ஹிம்புடான, அங்கொட பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
சந்தேகநபர் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் சட்டவிரோத சொத்துகளை விசாரணைப் பிரிவு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.
எம்.வை.எம்.சியாம்