பத்திரிகைகளில் திருமண விளம்பரங்களை வெளியிட்டு பெண்களை ஏமாற்றி பல கோடி ரூபாவை மோசடி செய்தார் என சந்தேகிக்கப்படும் ஒருவரை ஹோமாகம விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பாணந்துறை, ஹிரண பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர் தொழிலதிபர் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர் போன்று நடித்து திருமண விளம்பரங்களுக்கு பதிலளிக்கும் பெண்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டதாகவும், இவரின் மோசடியில் சிக்கிய பெண்களில் பாடசாலை ஆசிரியர்களும் அதிக எண்ணிக்கையில் உள்ளனர் எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
கம்பஹா, உடுகம்பொல பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய இவரே, ‘ராகுல ஜயசிங்க என்ற பெயரில் தன்னை அறிமுகம் செய்து மணமக்களின் வீடுகளுக்குச் சென்று மோசடி செய்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.