சீனாவினால் வழங்கப்பட்ட 500 மெற்றிக் டொன் அரிசி நேற்றைய தினம் (25) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
அந்த அரிசி விரைவில் தேவையுடைய இலங்கை மாணவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
அத்துடன், மேலும் 500 மெற்றிக் டொன் அரிசி அடுத்த வாரம் நாட்டை வந்தடையவுள்ளது.
இதன்மூலம் சீனாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள உதவித் தொகை 6 ஆயிரம் மெற்றிக் டொன்னாக அதிகரித்துள்ளதாக கொழும்பிலுள்ள சீன தூதரகம் டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளது