ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகம் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் ஊடகவியலாளர் சந்திப்பில் திரு. ஜயசேகர தெரிவித்த கருத்துக்களை தாம் மறுப்பதாக கூட்டுத்தாபனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினரின் அறிக்கைகள் பொய்யானவை, அடிப்படை ஆதாரமற்றவை, மக்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தும் நோக்கில் வெளியிடப்பட்டவை என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட டெண்டர் நடைமுறையை பின்பற்றி, தரத்தை உறுதி செய்த பின் குறைந்த விலையில் எண்ணெய் கூட்டுத்தாபனம் எரிபொருளை இறக்குமதி செய்வதாக அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)