நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைகளுக்கு மத்தியில் உணவகங்கள் சார்ந்த பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி, தேநீர், அப்பம் ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கப்படாத போதும், கொத்து ரொட்டி மற்றும் உணவு பொதிகளின் விலைகளை 10 ரூபாயால் அதிகரிப்பதற்கான சாத்தியம் உள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்களின் சங்கத் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
சமூக பாதுகாப்பு வரி மற்றும் உணவுப் பண்டங்களுக்கான உள்ளீடுகளின் விலைகள் அதிகரித்துள்ளமை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், சாதாரண தேநீர் மற்றும் அப்பம் போன்றவற்றின் விலைகள் அதிகரிக்கப்படாத போதும், பால் தேநீர் மற்றும் சிற்றுண்டிகளின் விலைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
எவ்வாறாயினும், நாளைய தினம் சமையம் எரிவாயுவின் விலை குறைக்கப்படவுள்ள நிலையில், அதன் பங்களிப்பை பொருத்து உணவுப் பண்டங்களின் விலைகள் தீர்மானிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.