டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி பாதுகாப்பாக இருக்க கட்டாயம் வெற்றி பெற வேண்டிய போட்டி நியூசிலாந்துக்கு எதிராக அவுஸ்திரேலியாவின் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இன்று (29) நடைபெறவுள்ளது.
இலங்கை நேரம் 1.30 மணிக்கு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
புள்ளிப்பட்டியலில் நியூசிலாந்து அணி முதலிடத்திலும், இலங்கை அணி ஐந்தாவது இடத்திலும் உள்ளன.
சிட்னி கிரிக்கெட் ஸ்டேடியம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு மிகவும் சாதகமான ஆடுகளமாக இருப்பதால் வனிந்து ஹசரங்க மற்றும் மஹிஷ் தீக்ஷனா ஆகியோர் ஓரளவு சாதகமாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உபாதைக்குள்ளான் பினுர பெர்னாண்டோவுக்குப் பதிலாக பிரமோத் மதுஷான் அல்லது கசுன் ராஜித மற்றும் அசித பெர்னாண்டோ ஆகியோரில் யார் இன்று விளையாடுவது என்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை.
இன்று (29) ஆடுகளத்தை ஆய்வு செய்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
அவுஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம், சிட்னியில் வானிலை மிகவும் நன்றாக இருப்பதாகவும், மழைக்கான வாய்ப்பு 5% என்றும் அறிவிக்கிறது.
அவுஸ்திரேலிய அணிக்கெதிரான தோல்வியின் பின்னர் இந்தப் போட்டிக்கு நல்ல திட்டத்தின் கீழ் விளையாடுவோம் என இலங்கை அணியின் உதவிப் பயிற்றுவிப்பாளர் நவீத் நவாஸ் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)