அரச ஊழியர்களுக்கு சம்பளத்தில் பாதியே வழங்கப்படுவதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் அரசு ஊழியர்களுக்கு பாதி சம்பளம் மட்டுமே வழங்கப்படும் என சமூக வலைதளங்களில் சிலர் தெரிவித்து வரும் கருத்துக்கள் குறித்து அவர் தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.