கடன் மறுசீரமைப்பு தொடர்பில் தற்போது நடைபெற்று வரும் கலந்துரையாடல்கள் வெற்றிகரமாக நிறைவடையும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சியம்பலாண்டுவை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ரதுமட பகுதியில் பயிர்ச்செய்கை தொகுதியொன்றை பார்வையிட்டதன் பின்னர் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
சீன நிதி அமைச்சருடன் இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்றினை அண்மையில் முன்னெடுத்திருந்தாக அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்காவின் வொஷிங்டன் நகருக்கு சென்றுள்ள நிதி இராஜாங்க அமைச்சர் தலைமையிலான குழுவினர், சர்வதேச நாணய நிதியம் மற்றும் இலங்கைக்கு கடன் வழங்கியுள்ள பிரதான நாடுகளான சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன்போது, விவசாயிகளுடனும், சுமூகமாக கலந்துரையாடியிருந்தார்.
உரம், களைக்கொல்லிகளின் பற்றாக்குறை, காட்டுயானைகளின் அச்சுறுத்தல் மற்றும் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.
உடனடியாக தீர்வு வழங்க வேண்டிய பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.