துபாயில் இருந்து இலங்கையில் போதைப்பொருள் கடத்தலை நடத்தி வருவதாகக் கூறப்படும் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் என்பவரால் இந்த ஹோட்டல் வாங்கப்பட்டதாக டெய்லி நியூஸ் தெரிவித்துள்ளது.
பொரலஸ்கமுவ பகுதியைச் சேர்ந்த ஷிரான் பாசிக்கின் மகனே தற்போது ஹோட்டலை நடத்தி வருவதாக சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் தெரியவந்துள்ளது.
போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தில் ஷிரான் பாசிக் வாங்கிய பல ஹோட்டல்கள் குறித்து தகவல் கிடைத்துள்ளதால், அவர் வாங்கிய ஹோட்டல்கள் குறித்து முதற்கட்ட விசாரணைகள் நடைபெற்று வருவதாக அந்த பிரிவு மேலும் கூறியுள்ளது. (யாழ் நியூஸ்)