ஜப்பானிய நிறுவனமான 'டைசே' நிறுவனத்திடம் கப்பம் கோரியதாக அமைச்சர் நிமல் சிறிபால சில்வாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டினை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நிராகரித்துள்ளது.
போதிய ஆதாரம் இல்லாமல் புகார் தள்ளுபடி செய்யப்படுவதாக ஆணையம் தெரிவித்துள்ளது.
கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நபர் ஒருவர் எழுத்துமூலமாக தாக்கல் செய்த முறைப்பாட்டுக்கு அமைய இந்த தீர்மானத்தை ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதன்படி திரு.நிமல் சிறிபால டி சில்வாவுக்கு எதிராக செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பான வழக்கு போதிய சாட்சியங்கள் இன்மையால் மூடப்படுவதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)