பாண் விலை தொடர்பில் நாளை (31) முதல் வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் வழங்க முடியும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் விலை கிலோ ஒன்றின் விலை ரூ. 250 ஆக குறைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தி நாளைய தினம் தீர்மானிக்கப்படும் என சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்தார்.
இதேவேளை, ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விற்பனை விலை ரூ. 250 ஆக குறைந்துள்ளதாக அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் சேனவிரத்ன தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)