இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளினால் அரசாங்கத்திற்கு மாதாந்தம் 30 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அரச வருமானம் இழக்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, அவர்களுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இவ்வாறான நடவடிக்கைகளினால் சாதாரண பயணிகளுக்கு எவ்வித அசௌகரியங்களும் ஏற்படாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)