இந்த வருடம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டமை ஆபத்தான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சியில் பல கடுமையான பிளவுகளுக்கு மத்தியில் 22வது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் பல்வேறு பதவிகளுக்கான சிறப்புரிமைகளை வழங்குமாறு ஆளும் கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்படும் எனவும் இருமுறை வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்படுமாயின் நாடாளுமன்றம் கலைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியின் பெரும்பான்மையானது எட்டு முதல் பத்து உறுப்பினர்களைக் கொண்ட சிறிய எண்ணிக்கையிலேயே தங்கியுள்ளது.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். (யாழ் நியூஸ்)