ஒவ்வொரு ஆட்சி மாற்றத்திலும் மாறாத நிலையான தேசியக் கொள்கை இலங்கைக்கு அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்கவில் மருந்து உற்பத்தி நிலையமொன்றை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு கட்சி வேறுபாடுகள் இன்றி பொதுவான தேசியக் கொள்கையின் கீழ் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.
"இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் சர்வதேசத் துறையில் அதை நிலைநிறுத்துவதற்கும் வலுவான பொருளாதாரக் கொள்கையும் அரசியல் ஸ்திரத்தன்மையும் அவசியம்" என்று அவர் கூறினார்.
தேசிய சபையை மேடையாகக் கொண்டு வலுவான தேசியக் கொள்கை தொடர்பான கலந்துரையாடல்களை மேற்கொள்ள முடியும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
போட்டி மற்றும் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஏற்றுமதி வருமானத்தை வலுப்படுத்தும் தேசியக் கொள்கையொன்றை உருவாக்குவதாக ஜனாதிபதி உறுதியளித்தார். (யாழ் நியூஸ்)