அஹுங்கல்ல முச்சக்கர வண்டி நிலையத்தில் நேற்று (12) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் இன்று மாலை விசேட அதிரடிப்படையினருடன் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அஹுங்கல்ல விளையாட்டு மைதானத்திற்கு அருகில் வைத்து விசேட அதிரடிப்படையினருடன் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் T-56 ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் ஏற்பட்ட தகராறில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது.
அஹுங்கல்ல பகுதியில் உள்ள கல் வெஹெர பிரதேசத்தில் வசிக்கும் 45 வயதுடைய நபர் ஒருவர் நேற்றைய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து பலபிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (யாழ் நியூஸ்)