இலங்கை கிரிக்கட் அணியில் டில்ஷான் மதுஷங்கவிற்கு பதிலாக பினுர பெர்னாண்டோ அங்கீகரிக்கப்பட்டார்.
ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 இன் நிகழ்வு தொழில்நுட்பக் குழு இலங்கை அணியில் இடது கை வேகப்பந்து வீச்சாளர் தில்ஷன் மதுஷங்கவுக்குப் பதிலாக பினுர பெர்னாண்டோவை அங்கீகரித்துள்ளது.
ஒன்பது டி20 போட்டிகளில் விளையாடியுள்ள பெர்னாண்டோ, உபாதைக்குள்ளான மதுஷங்க போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து மாற்று வீரராக நியமிக்கப்பட்டார். பெர்னாண்டோ இலங்கையில் இருந்த அவுஸ்திரேலியா நோக்கி புறப்பட்டு மற்ற அணி வீரர்களுடன் இணைவார்.
ஒரு வீரரை மாற்றுவதற்கு, மாற்று வீரரை அணியில் அதிகாரப்பூர்வமாக சேர்க்கும் முன், நிகழ்வு தொழில்நுட்பக் குழுவின் ஒப்புதல் தேவை.
நிகழ்வு தொழில்நுட்பக் குழு
க்ரிஸ்ட் டெட்லி
பீட்டர் ரோச்
ஷேன் டோய்ல்
ஷான் பொலோக்
இயன் பிஷொப்
(யாழ் நியூஸ்)