பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செல்வதற்கான பணிகளில் இந்திய கிரிக்கெட் அணி களமிறங்கியுள்ளது.
டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி தனது முதல் போட்டியாக பாகிஸ்தானை வரும் அக்டோபர் 16ம் திகதி மோதுகிறது.
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நீண்ட காலமாக இருதரப்பு தொடர்களில் விளையாடாமல் இருந்து வருகிறது. இதனை ஏற்படுத்த வேண்டும் என ரசிகர்களும் கோரி வருகின்றனர்.
ஆனால் சமீபத்தில் அதனை நிராகரித்திருந்தது பிசிசிஐ. அடுத்த 4 ஆண்டுகளுக்கான இந்திய அணியின் திட்டங்களில் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செல்வது குறித்து எதையுமே குறிப்பிடவில்லை. இதுகுறித்து பேசியிருந்த அதிகாரி, மத்திய அரசின் அனுமதி இல்லாமல் பாகிஸ்தானுக்கு செல்வது குறித்து பரிசீலிக்கக்கூடவில்லை எனக் கூறினார். இதனால் ரசிகர்கள் சோமாகினர்.
இந்நிலையில் பாகிஸ்தானுக்கு இந்திய அணி செல்வதற்கான பணிகளில் பிசிசிஐ களமிறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 50 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்தாண்டு பாகிஸ்தானில் நடைபெறுகிறது. 2009ம் ஆண்டு நடைபெற்ற தாக்குதலுக்கு பிறகு தற்போது தான் பாகிஸ்தானில் பெரும் தொடர்கள் நடைபெறுகிறது. இதில் இந்திய அணி பங்கேற்பதற்கு ஒப்புக்கொண்டுள்ளது.
அதாவது அடுத்தாண்டு ஆசிய கோப்பை தொடருக்காக, இந்திய அணி பாகிஸ்தானுக்கு பயணிக்கவுள்ளது. இதற்காக இந்திய அரசிடம் அனுமதி பெறுவது மற்றும் விசா பணிகள் ஆகியவற்றை தற்போது இருந்தே ஆலோசிக்க தொடங்கியுள்ளது. இதனால் பாகிஸ்தான் மண்ணில் இரு அணிகளும் மோதும் போட்டியை ரசிகர்கள் காணவுள்ளனர்.
இதுமட்டுமல்லாமல், மற்றொரு கூடுதல் மகிழ்ச்சி செய்தியும் ரசிகர்களுக்கு உள்ளது. அதாவது ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்தாண்டு இந்தியாவில் தான் நடைபெறவிருக்கிறது. எனவே இந்த தொடருக்காக பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.