எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பில் வாடிக்கையாளர்களின் முறைப்பாடுகள் அதிகரித்து வருவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சுமார் 200 முறைப்பாடுகள் தமக்கு கிடைத்துள்ளதாகவும், இந்த முறைப்பாடுகளுக்கு தீர்வு காண இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இடம்பெறும் முறைகேடுகளைக் களைவது தொடர்பான கலந்துரையாடலுக்கு தமக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் அதற்கு சாதகமான பதிலை வழங்கவில்லை எனவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் 60 எரிபொருள் நிரப்பு நிலையங்களின் மாதிரி பரிசோதனையை ஆரம்பித்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)