முன்னாள் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் உட்பட 39 பேருக்கு எதிராக தாக்கல் செய்த இரண்டு அடிப்படை உரிமை மனுக்களை விசாரணை செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் நிதி அமைச்சர்களான மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ, அலி சப்ரி மற்றும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்களான பேராசிரியர் டபிள்யூ.டி. லக்ஸ்மன் மற்றும் அஜித் நிவார்ட் கப்ரால் ஆகியோர் இங்கு பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
முறையான மதிப்பீட்டின்றி பொறுப்பற்ற பொருளாதார முடிவுகளை எடுத்து நாட்டையும் மக்களையும் திவாலாக்குவதற்கு காரணமானவர்கள் மீது உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரி இந்த அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் சந்திரா ஜயரத்ன, நீச்சல் சம்பியன் ஜூலியன் போலின் உள்ளிட்டோர் அடிப்படை உரிமை மனுவொன்றை சமர்ப்பித்துள்ளனர். (யாழ் நியூஸ்)