உலக நகர தினத்துடன் இணைந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சைக்கிளில் வேலை செய்யும் திட்டத்தை ஆரம்பிக்க நகர அபிவிருத்தி அதிகார சபை தீர்மானித்துள்ளது.
அதன்படி, எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் வாரத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் துவிச்சக்கர வண்டி மூலம் பணிக்கு அறிக்கை செய்யும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுவதுடன், அதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
ஆரோக்கியமான நகரவாசிகளை உருவாக்குதல், போக்குவரத்து நெரிசலைக் குறைத்தல் மற்றும் பிரதான வீதிகளுக்கு மேலதிகமாக பக்க வீதிகளை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்துதல் இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும் என நகர அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)