பேருவளை மற்றும் தர்கா நகரில் உள்ள அரிசி சேமிப்பகங்களுக்கு பேருவளை பொலிசார் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் சீல் வைத்துள்ளதாக பேருவலை மருத்துவ அலுவலக பொது சுகாதார பரிசோதகர் ஆர்.ஜே சிங்கபாகு தெரிவித்தார்.
இதன்படி, நீதிமன்ற உத்தரவின் பின்னர் குறித்த அரிசி கையிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக எல்லைக்குட்பட்ட பொருத்தமான இடத்தில் அழிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, மனிதர்கள் மற்றும் விலங்குகளின் பாவனைக்கு பொருத்தமற்ற அரிசியை கையிருப்பில் பதுக்கி வைத்து அதில் ஒரு பகுதியை விற்பனை செய்த சந்தேகநபரான வர்த்தகர் மற்றும் தொடர்புடையவர்கள் என கூறப்படும் தரப்பினரை எதிர்வரும் திங்கட்கிழமை (10) களுத்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தலா இரண்டாயிரத்து ஐநூறு கிலோகிராம் அதாவது 25 கிலோகிராம் கொண்ட நூறு அரிசி மூட்டைகள் தர்கா நகரின் அம்பகஹ சந்தி பகுதியில் உள்ள தனியார் பல்பொருள் அங்காடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. பொது சுகாதார பரிசோதகர்கள் அரிசி கையிருப்பைக் கண்டுபிடிக்கச் சென்றபோது, 1750 கிலோ அரிசி விற்பனை செய்யப்பட்டுள்ளதோடு, மீதமுள்ள 750 கிலோ அரிசி கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த விற்பனை நிலையத்தின் ஏனைய கிளைகளும் சீல் வைக்கப்பட்டு ஆதாரங்கள் சோதனை செய்யப்பட்டுள்ளதாக நிர்வாக பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார். அதில் 25 கிலோ அரிசி மூட்டைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. (யாழ் நியூஸ்)