எதிர்வரும் ஒக்டோபர் 20 ஆம் திகதியன்று சகல முஸ்லிம் பாடசாலைகள் மற்றும் முஸ்லிம் மாணவர்கள் கல்வி பயிலும் பாடசாலைகளில் மீலாதுன் நபி விழா ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்று கல்வி அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டே சுற்று நிருபத்தின் ஊடாக இந்த வலியுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இது தொடர்பில் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் கலீலுர் ரஹ்மான், கல்வி அமைச்சரிடம் கோரிக்கை ஒன்றை விடுத்திருந்தார்.