ஐஸ் என்ற போதைப்பொருள் சமூகத்தில் பரவலாக பரவி வருவதாக மதுவரி ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி தெரிவித்துள்ளார்.
வைபவம் ஒன்றில் உரையாற்றிய மதுவரி ஆணையாளர் நாயகம், இந்த போதைப்பொருள்கள் சமூகப் பேரிடராக வேகமாக மாறிவருவதாகத் தெரிவித்தார்.
கண்டி மாவட்டத்தின் கம்பளையில் அண்மையில் முகநூல் விருந்து ஒன்று சோதனையிடப்பட்டதாகவும், அங்கு 14 மற்றும் 15 வயதுடைய சிறுவர்கள் மயங்கிக் கிடந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனடிப்படையில், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இதனை பயன்படுத்த முயற்சிக்க வேண்டாம் எனவும், ஒரு தடவை முயற்சித்தால், மீண்டும் பாவனையில் இருந்து தப்பிக்க முடியாது எனவும், பிள்ளைகளும் பெற்றோர்களும் கேட்டுக்கொள்ளப்படுவதாகவும் மதுவரி ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி மேலும் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)