நாட்டின் மக்கள் வருவாயில் 75% உணவுக்காக செலவிடப்படுவதாக தெரியவந்துள்ளது.
நாட்டின் மக்கள்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மட்டுமே சரியான ஊட்டச்சத்துள்ள உணவைப் பெறுகின்றனர் என்பதும் தெரியவந்துள்ளது.
இதன்படி, பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் நேற்று (18) கூடிய பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பான குறுகிய மற்றும் நடுத்தர கால வேலைத்திட்டங்களை அடையாளம் காணும் தேசிய சபை உபகுழுவில் இது தெரியவந்ததாக கூறப்படுகிறது.
தற்போதைய பொருளாதார நெருக்கடியுடன் நாட்டில் போசாக்கின்மை நிலைமை அதிகரித்துள்ளதால், இந்த நிலைமையை போக்க குறுகிய மற்றும் நடுத்தர கால நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என இங்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. (யாழ் நியூஸ்)