ரூ. 40 மில்லியனுக்கும் அதிகமான பெறுமதியான நிதி மோசடி தொடர்பான விசாரணையில் தெஹிவளையைச் சேர்ந்த சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
செவ்வாய்க்கிழமை (25) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) சட்டத்தரணி கைது செய்யப்பட்டதாக டெய்லி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஹோட்டல் ஒன்றை கொள்வனவு செய்வதில் இடம்பெற்ற மோசடியில் குறித்த சட்டத்தரணி ஈடுபட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சந்தேகம் வெளியிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கணக்கில் பணம் இல்லாமல் ரூ. 40.6 மில்லியன் காசோலையை ஒப்படைத்து மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகநபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வீடொன்றை விற்கும் கொடுக்கல் வாங்கல் ஒன்றின் போது இதற்கு முன்னர் இருவரும் இணைந்து பணியாற்றியதால் பாதிக்கப்பட்ட பெண் சட்டத்தரணியுடன் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக சிஐடி தெரிவித்துள்ளது.
மேற்படி நிதி மோசடி தொடர்பில் நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து இந்த கைது இடம்பெற்றுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலும் தெரிவித்தனர். (யாழ் நியூஸ்)