பெண் ஒருவரை சிறைப்படுத்தி, அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் இரு பொலிஸ் கான்ஸ்டபிள்களுக்கு தலா 10 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் இன்று (19) தீர்ப்பளித்தது. கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த தீர்ப்பை அறிவித்தது.
கொழும்பு மேல் நீதிமன்றின் நீதிபதி ஆதித்ய பட்டபெந்திகே இந்த தீர்ப்பை அறிவித்த நிலையில், குறித்த குற்றவாளிகள் இருவரும் 15 ஆயிரம் ரூபா வீதம் அபராதம் செலுத்த வேண்டும் எனவும் அறிவித்தார்.
பொலிஸ் கான்ஸ்டபிள்களான எம். ஜயரத்ன மற்றும் எஸ். விஜேசிங்க ஆகியோருக்கே இவ்வாறு தண்டனையளிக்கப்பட்டது.
கடந்த 2015வ் ஆம் ஆண்டு புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் சேவையாற்றியுள்ள குறித்த இரு பொலிஸ் கான்ஸ்டபிள்களும், பெண்ணை சிறைப்படுத்தி துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எம்.எப்.எம்.பஸீர்