நுகேகொட, பாகொட பகுதியில் உள்ள வீடமைப்புத் தொகுதி ஒன்றில் நடத்தப்பட்ட விபச்சார விடுதி ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு இரு பெண்கள் சந்தேகத்தில் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ZOOM மூலம் கல்விச் செயற்பாடுகளில் ஈடுபடும் பாடசாலை மாணவர்களைக் குறிவைத்து குறித்த விபச்சார விடுதி செயற்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இணையத்தில் விளம்பரங்களை வெளியிட்டே இவர்கள் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமை மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
குறித்த விபச்சார விடுதியில் காணப்பட்ட சில உபகரணங்களையும் கைபப்பற்றியதாக நுகேகொட குற்றப் புலனாய்வுப் பொலிஸார் தெரிவித்தனர்.