ஈரானில் அண்மையில் ஹிஜாப்பினை முறையாக அணியவில்லை என கூறி கைது செய்யப்பட்ட மஹ்சா அமினி என்ற இளம்பெண்ணொருவர் பொலிஸார் தாக்கியதில் உயிரிழந்தார்.
இச்சம்பவமானது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்ததோடு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்காக பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக அப்பெண்ணின் சொந்த ஊரான சஹிஸ் நகரில் நேற்று முன்தினம் திரண்ட நூற்றுக்கணக்கான பெண்கள் தாங்கள் அணிந்திருந்த ஹிஜாப்பை கழற்றி எறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், ஈரான் ஜனாதிபதி இப்ராகிம் ரைசிக்கு எதிராக ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் ‘சர்வாதிகாரிக்கு
மரணம்’ என்ற கோஷத்தையும் எழுப்பினர். மேலும் பல பகுதிகளில் போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் தடியடி நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Girls in Iran Burn their Hijab publicly in protest against Murderer Regime of Radicals Forcing #Hijab on them.Girls shout BIG NO to Forced Hijab in Widespread Anti-Hijab protest after Morality Police Monsters killed #MahsaAmini in #Iran . Girls spark revolution against oppression pic.twitter.com/IBg0BiUmLm
— Jyot Jeet (@activistjyot) September 20, 2022
WATCH: In anti-regime protests in Rasht, the capital city of Gilan Province in #Iran, people are uniting to fight against the police.#IranProtests #Mahsa_Amini #Hijab pic.twitter.com/J3gJsZ59UU
— BNN Iran (@BNNIRNews) September 20, 2022