குருநாகல், வஹெர பிரதேசத்தில் உள்ள கால்வாய் ஒன்றில் சிக்கிய 14 வயது பாடசாலை மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
வீதியில் சென்ற வாகனத்தை தவிர்க்க முற்பட்ட போது சிறுவன் கால்வாயில் தவறி விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கனமழையால் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் வாய்க்கால் அருகே பாடசாலை பை ஒன்று கைவிடப்பட்டதைக் கண்டு பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
குருநாகல் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போதே குறித்த மாணவன் கால்வாய்க்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், குருநாகலில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் இம் மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளது. (யாழ் நியூஸ்)