திரு.ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேவை பிரதமர் பதவிக்கு நியமிக்குமாறு பிக்குகள் கோரியபோது அவர் கொல்லப்பட்டதாக திரு.ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயின் மனைவியும், பாராளுமன்ற உறுப்பினருமான திருமதி. சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.
நாட்டின் சட்ட அமைப்பினால் இதுவரை உண்மையான கொலையாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது கேள்விக்குறியாக உள்ளதாகவும் அதன் காரணமாக உண்மையான கொலையாளிகள் இன்னும் தலைமறைவாக இருப்பதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
பெர்னாண்டோபுள்ளே கொலையுடன் தொடர்புடைய வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டதால் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே வெடிகுண்டு கட்டி தற்கொலை செய்து கொண்டாரா என்று சிலர் கேட்பதாகவும் திருமதி பெர்னாண்டோபுள்ளே கூறுகிறார்.
இணைய அலைவரிசை கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)