சாய்ந்தமருது அல்-ஹிலால் பாடசாலையின் தரம் 1 இன் ஆசிரியர்கள் மற்றும் பகுதித் தலைவர் ஆகியோரினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறுவர் சந்தை பாடசாலையில் நடைபெற்றது.
தரம் ஒன்று மாணவர்களின் பாடப்பரப்பில் உள்ளபடி சந்தையில் பொருட்களை விற்பனை செய்வது எவ்வாறு?, வாங்குவது எவ்வாறு?, அதனை மக்களுக்குக் காட்சிப்படுத்துவது எவ்வாறு என்ற செயற்பாடுகளை மாணவர்களுக்குத் தெளிவூட்டி, அறிவூட்டும் நிகழ்வாக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் மாணவர்கள் சந்தை தொடர்பாக நிறைய விடயங்களைக் கற்றுக் கொண்டதுடன் சந்தை மற்றும் விற்பனை தொடர்பான தங்கள் திறமைகளையும் வெளிக்காட்டி, அதிபர் உட்பட பார்வையாளர்களது பாராட்டுக்களை மாணவர்கள் பெற்றுக் கொண்டதும் சிறப்பம்சமாகும்.
இந்நிகழ்வில், பாடசாலை அதிபர் யூ.எல்.நஸார், பிரதி அதிபர் றிப்கா அன்ஸார் உட்பட உதவி அதிபர்களான ஐனுல் மர்சுனா, எம்.எச்.நுஷ்ரத் பேகம் மற்றும் பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.
இந்நிகழ்வை சிறப்பாக ஒழுங்கு செய்து வழிநாடாத்திய தரம் 1இன் ஆசிரியர்கள் மற்றும் பகுதித் தலைவர் உட்பட அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.
யாழ் நியூஸிற்காக எம்.எஸ்.எம்.ஸாகிர்