வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் இலங்கையில் உள்ள தங்களது உறவினர்களுக்கு எரிவாயு சிலிண்டர்களை முற்பதிவு செய்வதற்கு வசதியாக, எரிவாயு சிலிண்டர்களை முற்பதிவு செய்வதற்கான செயலியை லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் தமது உறவினர்களுக்கான எரிவாயு சிலிண்டர்களை அருகிலுள்ள விற்பனை முகவர்களிடம் முற்பதிவு செய்ய முடியும் என நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் குறிப்பிட்டார்.
டொலர்களைப் பயன்படுத்தி செயலி மூலம் சிலிண்டர்களை கொள்வனவு செய்யலாம் என்றும், நாட்டில் நிலவும் அந்நியச் செலாவணி நெருக்கடியைத் தணிக்கும் நடவடிக்கையாக இந்த செயலி அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
இதனை இங்கே பதிவிறக்கம் செய்யலாம்:
iOS - https://apps.apple.com/lk/app/litro-home-delivery/id1501085017
Android - https://play.google.com/store/apps/details?id=lk.litro.fixel&hl=en&gl=US