தம்புத்தேகம பிரதேசத்தில் உள்ள வங்கி ஒன்றில் கொள்ளையிட்டு தப்பிச் செல்ல முயன்ற இரு சந்தேக நபர்கள் தம்புத்தேகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று (26) இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள தனியார் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக கொண்டுவரப்பட்ட 22.3 மில்லியன் ரூபா பணத்தை சந்தேகநபர்கள் இன்று கொள்ளையடிக்க முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் 5 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முற்பட்டபோது, பொலிஸ் சார்ஜன்ட் ஒருவருடன் சிறிது நேர போராட்டத்தை அடுத்து ஆயுதங்களுடன் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். (யாழ் நியூஸ்)