முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (02) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து நாட்டை வந்தடையவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்த நிலையில், சற்றுமுன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கினார்.
அவரை வரவேற்க அமைச்சர்கள் உட்பட பெருமளவான அமைச்சர்கள் விமான நிலையத்திற்குச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமான நிலையம் மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் ஏற்கனவே சிறப்பு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதிக்கு கொழும்பில் உத்தியோகபூர்வ இல்லம் ஒன்றை அரசாங்கம் தயார் செய்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. (யாழ் நியூஸ்)