இதுவரை நீர் கட்டணத்தை செலுத்தாத அமைச்சர்கள் இரண்டு மாதங்களுக்குள் அதனைத் தீர்க்காவிட்டால் நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பிரதி இணைப் பணிப்பாளர் பியல் பத்மநாத தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, குடிநீர் கட்டணத்தை செலுத்தாத பாராளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை வழங்குமாறு தாம் தெரிவித்ததாகவும், அதன் பின்னர் உரிய தொகையை இரண்டு மாதங்களுக்குள் செலுத்தாவிட்டால் இணைப்பை துண்டிக்க சபாநாயகர் தமக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வருடம் ஆகஸ்ட் மாதத்தில் மாத்திரம் நீர் கட்டணம் செலுத்தாத இருபத்தி ஆயிரத்துக்கும் மேற்பட்ட நீர் விநியோகங்களை துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். (யாழ் நியூஸ்)