நேற்று (15ம் திகதி) இரவு காங்கேசன்துறையில் இருந்து வந்த நகரங்களுக்கு இடையிலான புகையிரதம் கொள்ளுப்பிட்டிக்கு அருகில் தடம் புரண்டது.
இதன்காரணமாக இன்று (16) காலை 06.50 மணிக்கு பெலியத்த செல்லும் புகையிரதங்களும் 08.30 மணிக்கு பெலியத்தை நோக்கி செல்லும் புகையிரதங்களும் மாத்திரம் கொழும்பு கோட்டையிலிருந்து கரையோரப் பாதையில் இயங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
கரையோரப் பாதையில் இருந்து கொழும்பு கோட்டை வரை செல்லும் புகையிரதங்கள் இயங்கினாலும், சிறிய தொகையிலேயே இயக்கப்படுவதால், பல காலை ரயில் பயணங்கள் இதுவரை ரத்து செய்யப்பட்டுள்ளன. (யாழ் நியூஸ்)