ஹல்துமுல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடவேரிய தோட்ட பகுதியில் நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உடவேரிய தோட்டத்திலுள்ள நீர்வீழ்ச்சிக்கு கடந்த வெள்ளிக்கிழமை (02) 2 இளைஞர்கள் சென்றுள்ளதாகவும், அவர்களில் ஒருவர் செல்பி புகைப்படம் எடுக்க முற்பட்ட போது நீர்வீழ்ச்சியில் இருந்து தவறி விழுந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்த 24 வயதுடைய இளைஞனின் சடலம் நேற்று 200 மீற்றர் கீழே உள்ள நீர்க்குழாய் ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
ஹல்துமுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (யாழ் நியூஸ்)