நாட்டில் இவ்வார இறுதியில் 2 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் சுழற்சிமுறையில் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
மின்துண்டிப்பை மேற்கொள்வது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் சனிக்கிழமை A முதல் L மற்றும் P தொடக்கம் W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு பகல் வேளையில் 1 மணித்தியாலமும், இரவு வேளையில் 1 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
அத்துடன், ஞாயிற்றுக்கிழமை A முதல் L மற்றும் P தொடக்கம் W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு பகல் வேளையில் 1 மணித்தியாலமும், இரவு வேளையில் 1 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.