சட்டரீதியான வங்கி முறையின் ஊடாக இலங்கைக்கு சட்டரீதியாக பணம் அனுப்பும் வெளிநாட்டில் பணிபுரிந்துவரும் இலங்கையர்களுக்கு வழங்கப்படும் விசேட மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரத்தின் முதலாவது உரிமம் இன்று வழங்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார இலங்கையிலுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளருக்கு குறித்த உரிமத்தை வழங்கியுள்ளார்.
மின்சார வாகனங்களுக்கான இறக்குமதி அனுமதிப்பத்திரங்களுக்கு விசேட கோரிக்கை எழுந்துள்ளதாக அமைச்சர் இதன்போது தெரிவித்தார். (யாழ் நியூஸ்)