கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 1,716 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்ததாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை மாதத்தில் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்து மதிப்பு 1,817 மில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது.
இந்நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் அது 5.6 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளது.
இதற்கிடையில், இந்த உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் முக்கிய அங்கமான அந்நிய செலாவணி கையிருப்பு, ஜூலையில், 1,709 மில்லியனில் அமெரிக்க டொலராக காணப்பட்டதுடன், ஆகஸ்ட் மாதத்தில் 1,619 மில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.